முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனைவி, பிள்ளைகள் வருமானத்தையும் ஆதாரத்துடன்மனுதாக்கலில் தெரிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி   :  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய வருமானத்தின் ஆதாரத்தையும், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தின் வழியையும் கண்டிப்பாக வேட்பு மனுத் தாக்கலின்போது தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, வேட்புமனுத் தாக்கலின்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

இந்நிலையில், லோக் பிரஹாரி எனும் அரசு சாரா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்துஇருந்ததது. அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின் போது, தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை மட்டும் கணக்கில் காட்டுகிறார்கள். ஆனால், இந்த சொத்துக்கள் எப்படி வந்தது, அதற்கான வருமானம் என்ன? சொத்துக்கள் சேர்த்ததற்கு வருமான ஆதாரம் என்ன? என்பது குறித்து குறிப்பிடுவதில்லை.

இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் காட்டும் போது, அந்த சொத்துக்கள் வந்த விதம், தன்னுடைய வருமானம், மனைவியின் வருமானம், பிள்ளைகளின் வருமானம் ஆகியவை வந்ததன் வழி, வருமானத்தின் ஆதாரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதற்கு வேட்புமனுத் தாக்கல் படிவத்தில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். அதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.

இந்த மனு விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்து நிலையில், நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தையும், அதன் வருமானம் எப்படி வருகிறது?, சொத்துக்கள் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம்? உள்ளிட்ட விவரங்களையும் வேட்புமனுத் தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

முன்னதாக இந்த விசாரணையின் போது, அரசியல்வாதிகளின் சொத்துக்கள் 500 மடங்கு வரை ஒரு தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடையிலான வேட்புமனுத் தாக்கலில் திடீரென உயர்ந்து வருவது குறித்து மத்திய அரசு விசாரிப்பதில்லை என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

மேலும், ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தின் வழியையும் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.

அப்போதுதான் தேர்தலில் வெளிப்படைத் தன்மை இருக்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, வேட்பாளர்கள் அரசுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்து இருந்தாலோ, அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஏதேனும் ஒப்பந்தம் ஆதாயம் பெற்று இருந்தாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து