முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-ம் இடம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  சர்வதேச அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியலில், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடிஸ் மிலிடரி பேலன்ஸ் - 2018 என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2017-ல் இந்திய அரசு ராணுவத்துக்கு சுமார் ரூ.3.36 லட்சம் கோடி ஒதுக்கியது.  இதன்மூலம், உலக அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும்,  சீனா 2-ம் இடத்திலும், சவுதி அரேபியா 3-ம் இடத்திலும், ரஷ்யா 4-ம் இடத்திலும் உள்ளன. மேலும் இந்திய ராணுவத்தைவிட சீன ராணுவத்தில் கூடுதலாக 6 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

சீனாவிடம் 1,200 போர் விமானங்கள் உள்ள நிலையில் இந்தியாவிடம் 785 மட்டுமே உள்ளன. ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்காவுக்கு சவால் விடவும் சீனா திட்டமிட்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து