முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலால் பலவீனமாகிறது பா.ஜ.க: சிவசேனா பத்திரிகையில் கருத்து

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, இந்துக்களைக் கவரும் உத்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடைப்பிடித்து வருவதால், கர்நாடக தேர்தல் களத்தில் பா.ஜ.கவின் அடித்தளம் பலவீனமாகி வருவதாக சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியாகி உள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.கவும், காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு சிறந்த உத்திகளைக் கையாண்டு வருகிறார். குறிப்பாக, இந்து கோயில்கள், இஸ்லாமியர்களின் தர்காக்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு அவர் அடிக்கடி செல்வதைக் காண முடிகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவும், மிதமான இந்துத்துவக் கொள்கைகளை காங்கிரசும் கொண்டுள்ளது என்பதை பிரகடனப்படுத்துவதற்காக இந்த உத்திகளை ராகுல் காந்தி கடைப்பிடித்து வருகிறார்.

இதனால், இந்துத்துவா கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்து வரும் பா.ஜ.கவின் அடித்தளம், கர்நாடகாவில் ஆட்டம் கண்டு வருகிறது. இதே உத்தியைதான், குஜராத் தேர்தலின்போதும் ராகுல் மேற்கொண்டார். இதுவே, அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பெருவாரியான வாக்குகளை பெற்றுத் தந்தது.

அதேசமயத்தில், இந்துக் கோயில்களுக்கு ராகுல் காந்தி சென்று வருவதைப் பொறுக்க முடியாமல், அவர் மீது கர்நாடகாவின் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து வருகிறார். மதத்தின் பெயரால் இவ்வாறு தரம் குறைந்து கருத்துகள் வெளியிடுவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து