முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன் சுரேஷ் ரெய்னா ஆதங்கம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

காசியாபாத்: நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

யோ யோ டெஸ்டில்...
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா அண்மைக்காலமாக அணியில் இருந்து ஓரங்கப்பட்டு இருந்தார்.  இந்திய அணியில் இடம் பெற யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் யோ யோ டெஸ்டில் தேர்வு பெறாமல் இருந்த சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு இறுதியில் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், அவருக்கு உடனடியாக அணியில் இடம் கிடைக்கவில்லை.  நீண்ட கால காத்திருப்புக்கு பின், தற்போது, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு ....
நீண்ட போரட்டத்துக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, மீண்டும் அறிமுக போட்டியில் விளையாட உள்ளதை போல உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது:-  சிறப்பாக விளையாடியிருந்த போதும், இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது  வலியை ஏற்படுத்தியது. ஆனால்,தற்போது நான் யோ யோ டெஸ்டில் தேர்வு பெற்று விட்டேன். மிகவும் வலிமையானவனாக உணர்கிறேன்.

கடுமையான பயிற்சி ...
இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற அவா வலுவாக உள்ளது. என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நான் விளையாடுவேன். ஏனெனில், இங்கிலாந்தில் நான் சிறப்பாக விளையாடி இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.  எனக்கு தற்போது 31 வயதாகிறது, என்னைப்பொறுத்தவரை வயது என்பது ஒரு எண் மட்டுமே. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கும் போது மீண்டும் அறிமுக போட்டியில் களம் இறங்குவதை போல உணர்வேன்.” என்றார்.  மேலும், 4, அல்லது 5 இடத்தில் இறங்கி பேட் செய்வதையே தான் விரும்புவதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து