முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளை கட்டுப்படுத்தாததே வங்கி முறைகேட்டிற்கு காரணம் ரிசர்வ் பேங்க் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தன்னுடைய அதிகார வரம்புகளை வங்கி ஊழியர்களிடம் கட்டுப்படுத்தாததே ரூ. 11, 300 கோடி மோசடிக்குக் காரணம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் செயல்பாட்டில் இருந்த குளறுபடியால் மிகப்பெரிய மோசடியில் சிக்கியது கடந்த புதன்கிழமையன்று அம்பலமாகிறது. ரூ. 11, ஆயிரத்து 300 கோடி முறைகேடு நடந்திருப்பதற்கு வங்கி ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளிப்பட்டது.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து ரிசர்வ் வங்கி முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஊடகங்களில் ரிசர்வ் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி இதர வங்கிகளுக்கும் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின்றன. அப்படி எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை.

எனினும் வங்கியின் ஒரு ஊழியர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் செயலே மோசடிக்குக் காரணம். ஊழியர்களை கட்டுப்படுத்தாதததால் ஏற்பட்ட மோசடிக்கு வங்கி தான் பொறுப்பு.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் எடுக்கப்பட வேண்டிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது. எனவே நிலமையை ஆராய்ந்து அதற்குத் தகுந்த கட்டுப்பாடுகளை வங்கிக்குள் கொண்டு வர முதன்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக அந்த வங்கி கடந்த புதன்கிழமை பங்குச்சந்தைகளில் அறிவித்தது. இதனையடுத்து அப்போது முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 22.3சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து