முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல தனியார் நிறுவனத்தின் ரூ. 115 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள வி.ஜி.என் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரை அடுத்து இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்து ரூ. 11 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாடு தப்பியோடியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் உள்பட 3 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

நீரவ் மோடியின் வீடு மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் எஸ்.பி.ஐ வங்கியை மோசடி செய்ததாக வி.ஜி.என் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கியில் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வி.ஜி.என் டெவலப்பர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு உள்ளது. இதனால் சென்னை கிண்டியில் அந்த நிறுவனத்தின் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வி.ஜி.ன் டெவலப்பர்ஸ் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து