முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசையில் முதலிடம்: பெடரர் புது சாதனை

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ரோட்டர்டாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பெடரர் முதலிடம் பிடித்து சாதனையை படைத்துள்ளார். காலிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹாசே உடன் ரோஜர் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 4-6 என இழந்த ஃபெடரர்,‌‌ அடுத்த இரண்டு செட்களை 6-1, 6-1 ‌எனக் கைப்பற்றினார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் உலகத் தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தார்.

அதிக வயதில் , தரவரிசையில் முதலிடம் பிடித்து வீரர் என்ற சாதனையை 36 வயதான ரோஜர் ஃபெடரர் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக கடந்த 2003ல் அமெரிக்காவின் ஆண்ட்ரே அகாசி, 33 ‌வயதில் தரவரிசையில் முதலி‌டம் பிடித்‌ததே சாதனையா‌க‌ ‌இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து