முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம் கும்பாரஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கும்பாரஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.50 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமை வகித்தார்.

கடன் உதவி

14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.50 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் சார்பில் காரிமங்கலம வட்டம் கும்பாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 189 உறுப்பினர்களுக்கு ரூ.94.50 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். 2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர் கடன் வழங்க ரூ.7000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கிட ரூ.124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 31 ஜனவரி 2018 வரை தருமபுரி மாவட்டத்தில் 27,716 விவசாயிகளுக்கு ரூ.134.09 கோடி கடன் வழங்கி சாதனைப்படைத்துள்ளது. இத்திட்டத்தில் கும்பாரஅள்ளியில் ரூ.1.25 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.1.31 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயிர்கடனை முறையாக திரும்ப செலுத்தினால் பயிர் கடனுக்கான வட்டி தொகையினை அரசே ஏற்றுக்கொண்டு வட்டியில்லா பயிர் கடனாக வழங்கி வருகிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் 4மூ வட்டியில் கடன் வழங்க ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 31 ஜனவரி 2018 வரை ரூ.9.39 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கும்பாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 189 உறுப்பினர்களுக்கு ரூ.94.50 கோடி மதிப்பில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம்

மேலும் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான (24.02.2018) அன்று அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50மூ மானியத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரு இலட்சம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்திற்கு 2097 அம்மா இருசக்கர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 100 பெண்களுக்கு முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பேசினார்.

இவ்விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ரேவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கும்பாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் சேட்டு (எ) ரங்கசாமி, செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து