முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞானஒளிவுபுரத்தில் நடைபெற்ற "ஹேப்பி ஸ்டிரீட்" நிகழ்ச்சியில் கலெக்டர், ஆணையாளர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை -மதுரை மாநகராட்சியின் சார்பில் ஐந்தாவது முறையாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி மதி தியேட்டர் ஞானஒளிவுபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ. வீர ராகவ ராவ்,   முன்னிலையில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   தலைமையில்  மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
மதுரை மாநகராட்சி ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.சாலையில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்கேட்டிங், ஓவியம், சைக்கிளிங், ஜம்பிங் பால், ஸ்கிப்பிங், பேஸ்கட்பால், புட்பால், ஷெட்டில், ரோப் புல்லிங், கேரம்போர்டு, வாலிபால், ஸ்கூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களும் டான்ஸ், பிட்நெஸ் டான்ஸ், யோகா, சிலம்பாட்டம், லைவ்பேண்டு, கேம்ஸ்ஷோ உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு முறைகள், சர்க்கரை, இரத்த அழுத்தம்  உள்ளிட்ட பரிசோதனை அடங்கிய மருத்துவ முகாம் ஆகிய தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்;நிகழ்ச்சியில்

மாவட்ட ஆட்சித் தலைவர்   பேசும்போது தெரிவித்ததாவது :
மதுரை மாநகராட்சியின் சார்பில் ஹேப்பி ஸ்டீரிட் எனும் மகிழ்ச்சியான நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நிறைந்த சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு சாலையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியோடு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழச்சியின் முக்கிய நோக்கம் ஒரு நகரின் சந்தோஷத்தின் குறியீட்டினை மேம்படுத்தி ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதாகும். மதுரை மாநகரினை மாசில்லா மாநகராக, தூங்கா நகரத்தினை தூய்மையான நகரமாக மாற்றுவதற்காக பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
 
ஆணையாளர்   பேசும் போது தெரிவித்ததாவது
 மதுரை மாநகராட்சியின் சார்பில் ஐந்தாவது முறையாக இந்த ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக மாநகராட்சியின் ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் சாலைகள் வாகனங்கள் செல்வதற்காக மட்டுமே என்பதை மாற்றும்விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டிலும், செல்போனும் மூழ்கி இருப்பதை தவிர்த்து அனைவருடனும் சந்தோஷமாக அவரவர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சுதந்திரமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பயன்படுத்தும் வகையிலும், தங்கள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு திடக்கழிவினை அழிப்பது ஒரு சவாலாக உள்ளது. அதற்கு  குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே நீங்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். அப்பொழுதுதான் மட்கும் குப்பைகளை உரமாகவும், மட்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுவதுடன் ஆயில் உற்பத்தியும் செய்யலாம். இப்பணிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் முக்கியமான ஒன்றாகும். மதுரை மாநகராட்சியை தூய்மையான சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார். முன்னதாக ஏ.ஏ.சாலையில் ஆணையாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு.அரசு, நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், உதவி ஆணையாளர் (வருவாய்) திரு.ஆ.ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.முருகேசபாண்டியன்,  மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.விஜயகுமார்,  உதவிப்பொறியாளர்கள் திரு.பி.எஸ்.மணியன், திருமதி.மல்லிகா, திரு.பாபு, சுகாதார ஆய்வாளர்கள் திரு.கோபால், திரு.சேகர், எலிகண்ட் ஈவன்ஸ் நிறுவனத்தை சார்ந்த திரு.ஜீவன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர்கள்,  பங்களிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், பொது மக்கள், காவல்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து