முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏபிஎன் அம்ரோ டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறி முதலிடம் பிடித்தார் பெடரர்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ரோட்டர்டாம் : ரோட்டர்டாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார் ரோஜர் பெடரர்.

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் ஏபிஎன் அம்ரோ டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹசேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதனால் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகித்த ஸ்பெயினின் ரபேல் நடாலை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்தார் ரோஜர் பெடரர். இதன் மூலம் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார் 36 வயதான ரோஜர் பெடரர். இதற்கு முன்னர் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகாசி 33 வயதில் முதலிடத்தை பிடித்ததே சாதனையாக இருந்தது.

பெடரர் கூறும்போது, “இது நம்ப முடியாத வகையிலான சிறப்பான விஷயம், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலிடத்துக்கு நான் திரும்புவேன் என நினைத்தது இல்லை. இந்த தருணம் எனது வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து