முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடியில் தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      திருச்சி
Image Unavailable

லால்குடியில் மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டு நேற்று மாற்றி வைக்கப்பட்டதால் அனுமதி பெறப்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், பொதுபணித்துறை அதிகாரிகள் டிஎஸ்பி ரமேஷ்பாபு தலைமையில் மற்றும் இன்ஸ்பெக்டர் வாடிவாசல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்டு ஜல்லிகட்டு நடத்துவதற்கு உத்தரவு வழங்கினர்.

ஜல்லிக்கட்டு

நேற்று காலை 8 மணி அளவில் கோட்டாட்சியர் கோவிந்தராஜலு தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் காத்தான் முன்னிலையில் ஜல்லிகட்டு வீரர்கள் உறுதி மொழி எடுத்ததை அடுத்து ஜல்லிகட்டை தொடங்கிவைத்தார். லால்குடி தெற்கு தெருவில் காலை 08 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முன்னதாக விடியற்காலை 5 மணி முதலே மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர் ஜெயந்திமுரளி மற்றும் சரவணன் தலைமையில் பரிசோதனை செய்து அனுமதி செய்யபட்டது. ஜல்லிகட்டு காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. 8 மணியில் இருந்து தொடர்ந்து மாலை 3.30 மணி வரை ஜல்லிகட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது.

தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை, நாமக்கல், அரியலூர் கண்டிராதீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் இருந்து அழைத்துவரப்பட்ட 771 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் பங்கேற்க வந்த வீரர்களில் 500 பேர் பங்கேற்றனர். இதில் சீரிப்பாய்ந்த காளைகள் அடக்க 3 பிரிவுகாளாக பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் முட்டியதில் வீரர்கள் 36 பேர் காயம் அடைந்தனர். இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்ததால் லால்குடி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் லால்குடி தாசில்தார் ராகவன், டிஐஜி பவனே~;விரி, உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் டிஎஸ்பி ரமேஷ்பாபு தலைமையில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட போட்டியில் முதல்பரிசு கட்டில் திருச்சி பழகானங்குடி சேர்ந்த ஹரிக்கும். இரண்டாம் பரிசு அரியமங்கலம் பேன், செல்போன், ராஜசுந்தர், மூன்றாம் பரிசு திருச்சி முபாரக் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்று பிடிபடாத மாடுகள், மாடுபிடித்த வீரர்கள் ஆகியோர்களுக்கு சைக்கிள், பிரோ, நாற்காலி, பிரிட்ஜ், தங்க காசு, வெள்ளிகாசு, பயணபை, பாத்திரங்கள் குக்கர். தலைகவசம். என ரூ 15 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், மற்றும் காளைகளை அடக்க வீரர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை விழாகுழு தலைவர் வீரவிளையாட்டு ஜல்லிகட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான், தலைமையில், முத்தமிழ்செல்வன், பால்மாறன், வெற்றிவேல், முத்தமிழ்செல்வன், கங்கா, தக்காளிசிவா, கருணாநிதி, மற்றும் விழாக்குழுவினர், உள்ளிட்ட ஒருங்கிணைப்பு குழுவினர். செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து