முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலையில் 10 மணிக்கு மேளதாளம் முழங்க மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ணமலர்களாலும், நாணல்புல்,மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக இந்த விழாவில் நிர்வாக அதிகாரி ஜெயதேவி,திருக்கோவில் பூசாரிகள் மற்றும் முக்கியபிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை 20&ந்தேதி காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலைகன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து கோவிலில் மஞ்சள்காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் நகர்வலம்வரும்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 6&ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். 7&ந்தேதி பூப்பல்லக்கு விழா நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து