முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் 2103 பேர் பயணம்: பாதுகாப்பு கறுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு.

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  கச்சத்தீவில் பிப்ரவரி 23,24 ஆகிய தேதிகளில்  இரண்டு நாட்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழாற்கு பங்கேற்க இந்திய பக்தர்கள்  ராமேசுவரம் துறைமுகப்பகுதியிலிருந்து படகு மூலம் செல்வதால் பாதுகாப்பு கறுதி திங்கள் கிழமை முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ராமோசுவரம் மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
 இந்திய,இலங்கை ஆகிய இருநாட்டை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவிலுள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா பிப்ரவரி 23,24 ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில்  இந்திய பகுதியிலிருந்து  60 படகுகளில் 2103  பக்தர்கள் சென்று கலந்து கொள்ள உள்ளனர். திருவிழாவிற்கு பக்தர்கள் ராமேசுவரம் துறை முகப்பகுதியிலிருந்து படகு மூலம் செல்வார்கள்.ஆதலால் பக்தர்களை அழைத்து செல்லும் படகுகளையும் மீனவர்கள் தற்போது தயார்படுத்தி வருகின்றனர்.அதிகாரிகளும் படகின் தன்மை குறித்து சோதணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கை பகுதி மிகவும் குறைந்த தொலைதூரத்தில் அமைந்துள்ளது.இதனையொட்டி திருவிழைவை மையப்படுத்தி சமுக விரோதிகள் இருநாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.ஆதலால்  திருவிழாவையொட்டி தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பு கறுதி மத்திய,மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனையொட்டி ராமேசுவரம் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.  பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா கடலோரப்பகுதியில் மண்டபம் கடலோர காவல்படை போலீஸார்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.மேலும் திருவிழாவையொட்டி பாதுகாப்பு கறுதி ராமேசுவரம்,பாம்பன்.மண்டபம் ஆகிய பகுதி மீனவர்கள் இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை, தொடர்ந்து 7  நாட்களுக்கு மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.இதனால் திருவிழாவிற்கு பக்தர்களை அழைத்து செல்லும் படகுகளை தவிர மற்ற படகுகளை மீனவர்கள் தனியாக கடலில் நிறுத்தி நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.அதுபோல இலங்கைௌ பகுதியிலிருந்து திருவிழாவிற்கு 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து