முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபர் அதிரடி விடுதலை இருவரும் சம்மதத்தோடு உறவு வைத்துள்ளதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: காதலனுடன் உடல் உறவு வைத்துக்கொண்டதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததால், வயதால் மைனர் என்றாலும் கூட, மனதால் அவர் பெரிய மனுஷி என்று கூறியுள்ள மும்பை ஐகோர்ட், பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை விடுதலை செய்துள்ளது.

டெல்லி, நிர்பயா பலாத்கார சம்பவத்தில், பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய கொடூர குற்றங்களில் ஈடுபட்டபோதிலும், மைனர் என்பதற்காக அதில் ஒரு குற்றவாளிக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மனப்பக்குவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது காதலனால் கர்ப்பமாகியுள்ளார். தாய் கேட்ட பிறகு இதுகுறித்து, சிறுமியின் தாய் கண்டறிந்து மகளிடம் கேட்டபோது உண்மை தெரியவந்துள்ளது. மகளின் மாதவிடாய் தள்ளிப்போனதை கவனித்து அதன்பிறகு தாய் கேட்டபோதுதான், இந்த உண்மை தெரியவந்துள்ளது. மகள் மைனர் என்பதால் இது பலாத்கார வழக்காக பதிவு செய்யப்பட்டது.

மும்பை ஐகோர்ட் விசாரணை நடத்தியது.  நீதிபதி சுனில் சுக்ரே தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஏனெனில், இது விருப்பப்பட்டு நடந்த உடலுறவு என்பதும், ஒருமுறை மட்டுமின்றி, பல முறை இருவரும் உறவு வைத்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சிறுமியின் பெற்றோர் அவரின் பள்ளி சான்றிதழை காண்பித்து அவருக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என வாதிட்டபோதிலும், சிறுமியின் மனப்பக்குவத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறவு வைத்துக்கொண்டால் எந்த மாதிரி பிரச்சினை வரும் என்ற தெளிவு இருந்துள்ளது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

முதல் முறை உறவு சம்பவம் நடந்தபோதே தனது தாயிடமோ தந்தையிடமோ சிறுமி அதுபற்றி கூறவில்லை. தொடர்ந்து அதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. தெரிந்தேதான் இருவரும் சம்மதத்தோடு உறவு வைத்துள்ளதை இது உறுதி செய்கிறது. எனவே இதை பலாத்காரமாக கருத முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து