முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் கூடுதலாக ஓதுக்கப்பட்ட காவிரி நீரை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன்: எடியூரப்பா சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் காவிரி நதிநீர் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத்தின் பங்கீட்டு நீரையும், கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள நீரையும் முழுமையாக பயன்படுத்த தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என அக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

மைசூரில்  நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடியூரப்பா பேசியதாவது,

இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் சித்தராமையா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். முந்தைய ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசில் நடந்தவைகளை மறந்துவிட்டு ராகுல் காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார். - எடியூரப்பா

 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி வழங்கி வருகிறார். இதனால், இந்தியா முன்னேற்றமடைந்து வருகிறது. மேலும், உலக அளவில் இந்தியாவின் புகழ் ஓங்கியுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்ற முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழல் நிறைந்தது. நீர்ப்பாசனத் திட்டங்களை அலட்சியப்படுத்தி, அரசு கருவூலத்தை கொள்ளையடிப்பதிலேயே கவனமாக இருந்துவரும் அரசு ஆண்டு வருகிறது. இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் சித்தராமையா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். முந்தைய ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசில் நடந்தவைகளை மற்ந்துவிட்டு ராகுல் காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார்.

கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மென்மேலும் வளர்ச்சி காண முடியும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ரூ.ஒரு லட்சம் கோடியை ஒதுக்கி அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் நிறைவு செய்வேன். காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின்படி கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள நீரை முழுமையாக பயன்படுத்த தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து