முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் அனந்தகுமார் ஹெக்டே

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சமூகவலைத்தளத்தில் மன்னிப்பு கோரினார்.

மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தட்சிண கன்னடா, கார்வார், சிவமொக்கா ஆகிய 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்ட மக்கள் கன்னட மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் பரவியது.

இதைதொடர்ந்து அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சில கன்னட அமைப்பினரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் அவரது கட்சியனரே கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அனந்தகுமார் ஹெக்டே சமீபத்தில் சமூக வலைத்தளமான முகநூலில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்க பதிவில், நான் கன்னட மொழிக்கு எதிரானவன் அல்ல. நான் தாய்மொழியான கன்னடம் மீது மிகுந்த பற்று கொண்டவன். கன்னட மொழியை காப்பதும், வளர்ப்பதும் என் கடமை. நான் கூறிய கருத்து முற்றிலும் சரியானது தான். ஆனால், அதை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன. ஒருவேளை நான் கூறிய கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து