முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி-20 தொடரை இந்தியா வெல்லுமா? 2-வது போட்டி இன்று நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய 2-வது டி-20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா முன்னிலை...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட டி-20 தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டி-20 போட்டி...

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி செஞ்சூரியனில் இன்று (21-ந்தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி டி-20 தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஏற்கனவே 2 முறை டி-20 தொடரை கைப்பற்றி இருந்தது. 2006-ல் 1-0 என்ற கணக்கிலும், 2011-ல் 1-0 என்ற கணக்கிலும் வென்றது. 2012-ல் 0-1 என்ற கணக்கில் இழந்தது. இந்த 3 தொடர்களுமே ஒரே ஒரு போட்டியை கொண்டதாக இருந்தது. தற்போது தான் 3 போட்டிக்கொண்ட தொடராக இருக்கிறது.

அணியில் மாற்றம்...

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இந்திய அணி இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, டோனி, மனிஷ் பாண்டே ஆகியோரும் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் நீக்கப்பட்டார். 3 வேகப்பந்து வீரர்களுடன் ஆடியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆடிய ரெய்னா திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டார். ஆனாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

கடுமையாக போராடும்...

தென்ஆப்பிரிக்கா தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடரை சமன் செய்ய அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராடும். டிவில்லியர்ஸ் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. அந்த அணியில் பேட்டிங்கில் ஹென்ட்ரிக்ஸ், பெகருதீன், மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் தொடரை இழந்த தென்ஆப்பிரிக்கா டி-20 தொடரையும் இழக்காமல் இருக்க இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால், ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாகூர், அக்‌ஷர் பட்டேல், ராகுல்.

தென்ஆப்பிரிக்க அணி

டுமினி (கேப்டன்), ஹென்ட்ரிக்ஸ், ஜான் ஸ்முட்ஸ், மில்லர், பெகருதீன், கிளாசன், பெகுல்வாயோ, கிறிஸ் மோரிஸ், பேட்டர்சன், ஜூனியர் டாலா, தபரிஸ் சம்சி, கிறிஸ்டியன் ஜான்கர், பான்ஜியோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து