முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய முன்வர வேண்டும்: நடிகை ரோஜா

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

திருமலை, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் அறிவித்தது போலவே, ஆளும்கட்சியான தெலுங்கு தேசம் எம்.பிக்களும் ராஜினாமா செய்ய முன் வர வேண்டும் என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களைப் போல், தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன் வர வேண்டும். - ரோஜா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநில மகளிர் அணி தலைவியும், நகரி சட்டப் பேரவை உறுப்பினருமான நடிகை ரோஜா, திருமலையில் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மார்ச் 5-ம் தேதி முதல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் ஏப்ரல் 6-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதே பிரச்சினைக்காக தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன் வர வேண்டும்.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சிறப்பு அந்தஸ்துக்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படுமென அறிவித்தார். ஆனால் இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சி பேதமின்றி அனைவரும் போராடினால் மட்டுமே சிறப்பு அந்தஸ்து சாத்தியமாகும். இவ்வாறு ரோஜா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து