முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூரில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (20.02.2018) நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது, நாடு தழுவிய குடற்புழு நீக்க நாளில் ஒரு வயது குழந்தையிலிருந்து 19வயது வரை உள்ள அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி (திங்கள் கிழமை), விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மார்ச் 31ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய தினங்களில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய பாடத்திட்ட பள்ளிகள், மத்திய அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

½ (200 மில்லி கிராம்) மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவ மருந்து 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 1 மாத்திரை (400 மில்லி கிராம்) அல்பெண்டசோல் 2-19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (ஆண், பெண் இரு பாலருக்கும்) கொடுக்கப்படவேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,46,731 மாணவ மாணவிகளுக்கும், தனியார் பள்ளிகளில் பயிலும் 2,06,982 மாணவ மாணவிகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மற்றும் பள்ளி செல்லா 94,336 குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும்.

நடவடிக்கை

ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே குடற்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், குடற்புழு நீக்குவதனால் ஏற்படும் நன்மைகள், குடற்புழு தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றை இணைத்து குடற்புழு நீக்கும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து