முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.259.72 லட்சம் மதிப்பிலான 20 வகுப்பறைகள் அடங்கிய கூடுதல் கட்டடங்கள் முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.259.72 லட்சம் மதிப்பிலான 20 வகுப்பறைகள் அடங்கிய கூடுதல் கட்டடங்கள் மற்றும் ஆய்வகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள்

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் , உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் , தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் , மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் பள்ளிக் கல்வி துறை இயக்குநர் முனைவர் ஆர்.இளங்கோவன் , அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.259.72 லட்சம் மதிப்பில் 20 வகுப்பறைகளும், அறிவியல் ஆய்வகமும், கழிவறைகளும் அடங்கிய கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இக்கூடுதல் கட்டடமானது 19 ஆயிரத்து 252.49 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் மிதிவண்டி நிறுத்தகம், கலையரங்கம், சுற்றுச்சுவர்,கழிவறைகள்,சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய இதர வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, முதன்மை கல்வி அலுவலர் தனமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரெகுநாதன், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் அருணகிரி, வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மூர்த்தி,வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து