முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.134 கோடி மதிப்பீட்டில் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகள் மனைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ.133 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் மனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

541 மனைகள்...

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை, கே.கே.நகர் மரவேலைப் பிரிவு திட்டப் பகுதியில் 110 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 407 சுயநிதி திட்ட குடியிருப்புகள் மற்றும் 154 இடமாறுதல் அரசு ஊழியர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சிமூலமாக திறந்து வைத்தார். மேலும், 23 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கான வாடகை குடியிருப்புகள், உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய 541 மனைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ஊழியர் குடியிருப்புகள்...

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, கே.கே. நகரில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வாரியத்திற்குத் தேவையான மரப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பயன்பாடு இன்றி உள்ளதால், சென்னை மாநகரத்தின் வீட்டுத் தேவையை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இந்த இடத்தில் பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, சென்னை கே.கே. நகரில் உள்ள  மரவேலைப்பிரிவு திட்டப் பகுதியில் 3.73 ஏக்கர் நிலப் பரப்பளவில் 110 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 407 சுயநிதி திட்ட குடியிருப்புகள் (352 மத்திய வருவாய் பிரிவு குடியிருப்புகள் மற்றும் 55 குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள்) மற்றும் 154 இடமாறுதல் அரசு ஊழியர் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சென்னை - தஞ்சாவூர்...

மேலும், சென்னை, மைலாப்பூர், சீத்தம்மாள் காலனியில் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கான 2 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில்  சுயநிதி திட்டத்தின் கீழ் 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி மற்றும் வில்லிபத்திரி கிராமங்களில் மனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 38.91 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய 541 மனைகள் என மொத்தம் 133 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் மனைகளை  முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா  வைத்தியநாதன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு   வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய சந்திர பானு ரெட்டி மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து