முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் உங்கள் சம்பளத்தினை வழங்க முடியாது: ஊழியர்களுக்கு நீரவ் மோடி கடிதம்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, 11,400 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்ட வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடி  ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் தங்களது நிறுவனத்தின் பங்குகளைப் பரிமுதல் செய்வது, வங்கி கணக்கை முடக்கியுள்ள காரணங்களாக ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீராவ் மோடி ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து விசாரித்த போது நீராவ் மோடியின் சட்ட வல்லுநர்கள் அது உன்மை தான் என்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் அவரது ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதங்கள் போன்று அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி துறைக்கும் கடிதம் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதல் நாள் நீராவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தியது மட்டும் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், வைர நகைகள் போன்றவை பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஜனவரி 1ம் தேதியே நீராவ் மோடி வெளிநாடு சென்றுவிட்டதாகவும் எங்குச் சென்றுள்ளேன் என்று தற்போதைக்குத் தெரிவிக்க முடியவில்லை என்றும் நிறுவனப் பங்குகள், ஷோரூம்கள், வங்கி கணக்குகள் போன்றவை முடக்கப்பட்டுள்ளதால் தற்போதைக்கு என்னால் உங்கள் சம்பளத்தினை அளிக்க முடியாது. எனவே வேறு வேலைக்குச் செல்லுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீராவ் மோடி எழுதியுள்ள கடிதத்தில் ‘நமது அமைப்பு பாதிப்படைந்துள்ளது' என்று கூறி, என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று நான் கவனமாகக் கண்காணித்து வருகிறேன். ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 15-ம் தேதி பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு இவர் எழுதிய கடிதத்தில் தான் வாங்கிய கடனை திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளதாகவும், வங்கி கூறுவது போன்று 11,400 கோடி ரூபாய் கடன் ஒன்றும் தான் பெறவில்லை, அதை விட மிகக் குறைவாகத் தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் தனது நிறுவனத்தின் கணக்கர் ஹேமந்த் பட்-க்கு 64 வயது ஆன போதிலும் அவரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் ஒரு இதய நோயாளி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நேற்று நீராவ் மோடி மற்றும் சோக்‌ஷி என இருவரின் நிறுவனத்தில் இருந்தும் 5 முக்கிய ஊழியர்களையும் கைத்துச் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் இருந்தும் இந்த வழக்குடன் தொடர்புள்ளதாகத் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மட்டும் இல்லாமல் முன்னால் ஊழியர்கள் சிலரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் மார்ச் 3ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எல்லாம் வைர நகைகளை விற்று வந்த நீராவ் மோடி மீண்டு தனது நிறுவனம் மற்றும் ஷோரூம்களைச் சட்டப்பூர்வமான திறப்பேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலம் விரைவில் மாறும், நாம் மீண்டும் இணைந்து செயல்படும் நேரம் வரும். வங்கி கணக்குகள் மற்றும் பங்குள் மீண்டும் ஒப்படைக்கப்படும் போது இந்தச் சம்பள பாக்கியினை நான் உங்களுக்குத் திருப்பி அளிப்பேன் என்றும் நீராவ் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து