முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70-வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி அ.தி.மு.க. தலைமை கழக வளாகத்தில் ஜெயலலிதா முழு உருவச்சிலை - ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் திறந்து வைக்கிறார்கள்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி அ.தி.மு.க. தலைமை கழக வளாகத்தில் அவரது முழு உருவச்சிலையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் திறந்து வைக்கிறார்கள்.

நமது அம்மா நாளேடு...

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவி்பபு வருமாறு:

அ.தி.மு.கவின் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில், எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலையை ஒட்டி, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைக்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடு ``நமது அம்மா’’ பத்திரிகையை அறிமுகம் செய்து, துவக்கி வைக்க உள்ளனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு...

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்கள் மாவட்’ட, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகத்தின் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து