முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராட்மேன் சாதனையை கோலி முறியடிப்பாரா? 2-வது 20 ஓவர் கிரிக்கெட்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பிராட்மேன் சாதனையை கோலி முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. முன்னதாக, ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

எதிர்ப்பார்ப்பு...

இந்த போட்டியில், இந்திய அணி கேப்டன் விராட்கோலி மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. தென்ஆப்பிரிக்கா பயணத்தில் அவர் இதுவரை 13 இன்னிங்சில் 870 ரன் குவித்துள்ளார். 3 டெஸ்டில் 286 ரன்னும் (6 இன்னிங்ஸ்), 6 ஒருநாள் போட்டியில் 558 ரன்னும், முதல் 20 ஓவர் போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) சாதனையை முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

104 ரன்கள் தேவை...

பிராட்மேன் சாதனையை முறியடிக்க 104 ரன்னும், ரிச்சட்ர்ஸ் சாதனையை முறியடிக்க 175 ரன்னும் கோலிக்கு தேவை. பிராட்மேன் 1930-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது 5 டெஸ்டில் 974 ரன் குவித்தார். ஒரு சுற்றுப்பயணத்தில் எடுக்கப்பட்ட 2-வது அதிக ரன் இதுவாகும். விவியன் ரிச்சர்ட்ஸ் 1976-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது 1045 ரன் குவித்து (4 டெஸ்டில் 829 ரன் + 3 ஒருநாள் போட்டியில் 216) வரலாறு படைத்தார்.

மிகவும் கடினமே...

தென்ஆப்பிரிக்கா பயணத்தின் கோலிக்கு இன்னும் 2 ஆட்டங்களே இருக்கிறது. இதனால் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிப்பது என்பது மிகவும் கடினமே. பிராட்மேன் சாதனையை முறியடிக்க 104 ரன்களே தேவைப்படுகிறது. இதனால் அவரது சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆட்டத்தில் அவர் 104 ரன்களை எடுக்க வேண்டும். இரண்டு போட்டியில் 130 ரன்கள் எடுத்தால் அவர் 1000 ரன்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

1982 ரன்கள் எடுத்தார்...

நேற்றைய ஆட்டத்தில் கோலி மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் 18 ரன்னை எடுத்தால் 2 ஆயிரம் ரன்னை தொடுவார். இந்த ரன்னை எடுக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். 29 வயதான கோலி 50 ஆட்டத்தில் விளையாடி 1982 ரன் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் குப்தில், மேக்குல்லம் ஆகியோர் மட்டுமே 2 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த ரன்னை எடுக்கும் 3-வது வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து