முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் தலைப்பாகையை அகற்றி சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் சீக்கியர் ஒருவரை தலைப்பாகையை அகற்றி இனவெறியுடன் தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி எம்.பியாக இந்திய வம்சாவளி சீக்கியர் தன்மன்ஜித் சிங் தேஷி பதவி வகித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பஞ்சாபை சேர்ந்த ரவ்னித் சிங், (வயது 37) என்பவர் நாடாளுமன்ற வளாகத்தில் காத்திருந்துள்ளார். பிற பார்வையாளர்களுடன் சேர்ந்து அவரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை நோக்கி ஓடி வந்த ஒருவர் ‘‘முஸ்லிமே திரும்பிச் செல்’’ எனக் ஆவேசமாக கூறினார்.
மேலும் ரவ்னித் சிங்கின் தலைப்பாகையை அகற்றவும் முயன்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ரவ்னித் சிங் கூறுகையில் ‘‘என்னை திட்டியதுடன், இனவெறி உணர்வுடன் என்னை தாக்கவும் முற்பட்டார். அவர் யார் என்று தெரியவில்லை. வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என எண்ணுகிறேன்’’ எனக் கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து இந்திய வம்சாவளி எம்.பி தன்மன்ஜித் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்ல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து