முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க ஆசியர்களுக்கு துப்பாக்கி வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்து வர, பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பள்ளி துப்பாக்கிச் சூட்டை தடுக்க, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறியபோது, "நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கும் திறமையான ஆசிரியராக இருந்தால் உங்களால் தாக்குதலை விரைவாக தடுக்க முடியும். பள்ளிகளில் 20 சதவீத ஆசிரியர்கள் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். துப்பாக்கியை திறமையாக கையாளும் நபர்களுக்கு மட்டுமே நான் கூறுவது பொருந்தும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து