முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பணியாற்றி வரும் பிற மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை: ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் பிற மதங்களைச் சேர்ந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு ஐதராபாத் ஐகோர்ட் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது பிற மதங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 45 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஊழியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பணியில் உள்ள பிற மதங்களைச் சேர்ந்த 45 ஊழியர்களையும் தேவஸ்தானம் பணியிலிருந்து நீக்கவும், அவர்கள் வகித்து வரும் பணிக்கு தக்கவாறு ஆந்திர அரசில் அவர்களுக்குப் பணி வழங்குமாறும் முறையிட்டது.

தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மனதால் இந்து மதத்திற்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து ஏழுமலையான் மீதும் பயபக்தி கொண்டு பணியாற்றி வருகிறோம். அதனால் எங்களை தேவஸ்தான பணியிலிருந்து நீக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிற மதங்களைச் சேர்ந்த 45 ஊழியர்களும் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து பிற மதங்களைச் சார்ந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து