முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 போட்டியில் தோல்வி: தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் - கேப்டன் விராட் கோலி பேட்டி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்கு பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம்

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நடந்தது.

இந்தியா பேட்டிங்...

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி இந்திய கிரிக்கெட் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி துவக்கத்தில் தடுமாறியது. எனினும் ரெய்னா (30 ரன்கள்), டோனி (52 ரன்கள்), மனிஷ் பாண்டே (79 ரன்கள்) அடித்தனர். இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. கடந்த போட்டிகளை போல், இல்லாமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணி இந்த வெற்றிக்கு முழு தகுதிடையுது என்றார்.

எதிர்பார்த்தோம்...

விராட் கோலி மேலும் கூறுகையில்,  தென் ஆப்பிரிக்க அணி வலுவாக எதிர்த்து விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான உணர்ச்சியை வெளிப்படுத்தினர். 188 என்பது வெற்றி பெற தேவையான ரன்களோ இல்லையோ, எப்படியிருந்தாலும், பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஒன்றாகும். ஆரம்பத்தில் விக்கெட் வீழ்ந்த போது, 175 ரன்களைத்தான் நாங்கள் எதிர்நோக்கினோம்.  துவக்கத்தில் சுரேஷ் ரெய்னாவும் மனிஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினர். பின்னர் டோனி- பாண்டே இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 188 ரன்களை எட்டினோம். வெற்றிக்கு இந்த ரன்கள் போதுமானது என்று  நான் எண்ணினேன்.

கடினமான சூழலை...

12-வது ஓவருக்கு பிறகு தொடர்ச்சியாக தூறல் விழுந்தது கடினமான சூழலை உருவாக்கியது. அனைத்து பெருமைகளும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களையே சாரும். கலஸ்ஸேன் மற்றும் டுமினி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்ததால், பந்தை பிடித்து வீசுவது சிரமமாக இருந்தது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து