முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

பும்ராவுக்கு ஓய்வு...

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி-20 போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்திய அணியில் வயிற்று பிரச்சினையால் அவதிப்படும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

இந்தியா பேட்டிங்...

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர்.

தப்பி பிழைத்த தவான்...

கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் பந்திலேயே ஷிகர் தவான் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து அவரது பேட்டில் உரசிய பின்னரே காலுறையில் படுவது தெரிந்தது. இதனால் தவான் தப்பி பிழைத்தார். ஆனால் முதல் ஓவர் மெய்டன் ஆனது. அடுத்த ஓவரில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபிள்யூ. ஆகி பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா ஆட வந்தார்.

கோலி 1 ரன்...

முதல் ஓவரை மெய்டனாக்கிய தவான், கிறிஸ் மோரிசின் அடுத்த ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் தனது பங்குக்கு 24 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சாதனை நாயகன் கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் (5 பந்து) வீழ்ந்தார். ஜூனியர் டாலாவின் ஓவரில் சற்று எழும்பி வந்த பந்து அவரது கையுறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக விழுந்தது.

மனிஷ் - டோனி...

பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே அதிரடி காட்டினார். சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியின் ஓவரில் 2 சிக்சர்களை தூக்கியடித்தார். அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டிய போது, சுரேஷ் ரெய்னா 31 ரன்களில் (24 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவுடன், விக்கெட் கீப்பர் டோனி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய டோனி, போக போக துரிதமாக மட்டையை சுழட்டினார். பாண்டேவும், தனக்கே உரிய பாணியில் சில சூப்பரான ஷாட்டுகளை அடித்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டோனி 2 சிக்சரும், 3 பவுண்டரிகளும் சாத்தினார். இருவருமே டி-20 போட்டியில் தங்களது 2-வது அரைசதங்களை கடந்து அசத்தினர். டி-20 முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.

மனிஷ் பாண்டே 79 ரன்களுடனும் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

189 ரன்கள் இலக்கு...

அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மட்ஸ் 2 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 26 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் இந்திய பந்து வீச்சை நொறுக்கினர். குறிப்பாக கிளாசென், யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது கிளாசென் 69 ரன்களில் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆனார். பின்னர் வந்த டேவிட் மில்லர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா வெற்றி...

ஆனாலும் டுமினி-பெஹர்டைன் ஜோடி போட்டு தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. தென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி (64 ரன், 40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பெஹர்டைன்(16 ரன்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 7 சிக்சர் உள்பட 64 ரன்களை வாரி வழங்கியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கும் நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி கேப்டவுனில் நாளை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து