முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்-1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, டிரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க உதவும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அதுவரை எச்1பி விசாவை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு தடை விதித்து அமெரிக்க அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் எச்-1பி விசா வழக்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய விதிமுறைபடி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்களின் கல்வி தகுதி, அவருக்கு குறிப்பாக வழங்கப்படும் பணி, செய்யும் வேலையில் அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

அதுபோலவே மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மூன்றாண்டுகளக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும்.

அமெரிக்காவில் இந்த ஆண்டுக்காக விசா ஏப்ரல் 2ம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய உத்தரவு வெளிநாடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி, உயர் கல்வி கற்கவும், பணியாற்றவும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அங்கு நிரந்தரமாக தங்கும் கிரின்கார்டு கிடைக்கும் வரை இந்த விசாவை நீட்டித்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.

இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த விசாவை பயன்படுத்தியே அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர். அமெரிக்கா வழங்கும் மொத்த எச்1பி விசாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து