முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று ஜெயலலிதா சிலை திறப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.தி.மு.க தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.

70-வது பிறந்தநாள்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை கொண்டாட தமிழகமெங்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

அம்மா நாளேடு...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மா என்ற நாளேடும் இன்று வெளியிடப்படுகிறது. ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் அறிவித்த திட்டமான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து