முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை வைத்திருந்த இந்திய தடகள வீரருக்கு 4 ஆண்டு தடை

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தனது அறையில் வைத்திருந்த காரணத்திற்காக இந்திய தடகள வீரர் நான்கு ஆண்டு தடை பெற்றுள்ளார்.

அதிகாரிகள் சோதனை
இந்தியாவின் 400 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் ஜித்தின் பால். இவர் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் உள்ள கேம்பஸ் அறையில தங்கியிருந்தார். இவர் தங்கியிருந்த அறையில் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெல்டோனியம் அவரது அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு சோதனை மையத்தில் இது உறுதிச் செய்யப்பட்டது.

நான்கு ஆண்டுகள் தடை
இதனால் தேசிய ஊக்க மருந்து தடை அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஜித்தின் பாலுக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்திய தடைகள வீரர் ஒருவர் ஊக்கமருந்து விவகாரத்தில் தடைபெறுவது இதுதான் முதன்முறையாகும். ஆனால், ஜித்தின் பால் போட்டிக்கு முன்னரோ, போட்டிக்கு பின்னரோ ஊக்கமருந்தை உட்கொள்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பயன்படுத்திய அதேவகை ஊக்க மருந்தைதான் இவரும் பயன்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து