முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் தைவான் வீராங்கனையை எதிர்கொள்கிறார் சாய்னா நெவால்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை சாய்னா, நம்பர் ஒன் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

கடும் சவால்...
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் பர்மிங்காமில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றிலேயே சாய்னா நேவாலுக்கு கடும் சவாலாக இருக்கிறது. உலகத்தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சாய்னா, நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் தாய் சு யிங்கை எதிர்கொள்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் தொடரில் சாய்னா இவரிடம் தோல்வியடைந்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்க சாய்னாவிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

பி.வி.சிந்து...
பிவி சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேவேளையில் 2-வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஷாங்-கை எதிர்கொள்வார். இந்திய ஓபனில் பிவி சிந்துவை தோற்கடித்தவர் பெய்வென் ஷாங் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவிலா் கிதாம்பி ஸ்ரீகாந்த் பிரான்சின் பிரிஸ் லெவர்டேஸ்-ஐ எதிர்கொள்கிறார். ப்ரணீத் கொரியாவின் சன் வான் ஹோவையும், பிரணாய் சீன தைபேயின் சோயு தியென் சென்னை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து