முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது - சாதனை புரிந்த பல்வேறு மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு 25ம் ஆண்டு விழா நடைபெறவுள்ளதால், 20 ஆண்டுகள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 300 பேர் கல்லூரியில் சந்தித்து, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரசேகரன் கூறும் போது, கடந்த 1994ம் ஆண்டு பர்கூர் அரசு பொறியியற் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் தொடங்கப்பட்டது. 2000ம் ஆண்டு 2 கட்டிடங்களுடன் பர்கூர் அருகே மாதேப்பள்ளி இக்கல்லூரி இடம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உலக வங்கி நிதியுதவியுடன் டிஇகீயூஐபி என்கிற திட்டம் 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை, மின்னனுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கணினி அறிவியில் பொறியியல் துறைகளுக்கு முதல் தர அங்கீகாரம் கிடைத்தது. மேலும், 2017 முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக மாறியது. இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர், உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கலலூரியில், அடுத்த கல்வியாண்டில் கல்இக்கல்லூரி 25ம் ஆண்டு விழா நடைபெற்றது என்று கூறினார்.

கடந்த 1998ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வி படிப்பை முடித்த மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் , தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த விழாவிற் கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சந்திரசேகரன், பேராசிரியர் தங்கராஜ் மற்றும்மாணவர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து