முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்பட்ட நெரிசல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் ஹைனான் தீவில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் 10 கி.மீட்டர் தூரத்துக்கு கார்கள் வரிசையாக நின்றன. இதனால், போக்குவரத்தது நிலைமை சீரடைவதக்கு 5 நாட்கள் ஆனது.

ஹைனான் தீவில்...

சீனாவில் பின்பற்றப்படும் நாட்காட்டியின்படி கடந்த 16-ம் தேதி புத்தாண்டு பிறந்தது. அதையொட்டி அங்கு ஒருவாரம் கொண்டாட்டங்கள் நடந்தன. புத்தாண்டை கொண்டாட சீனாவின் பிரபல சுற்றுலா தலமான ஹைனான் தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு தங்கி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம் முடிந்ததும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அப்போது தான் அங்கு பிரச்சினையே உருவானது. ஹைனான் தீவில் இருந்து குவாங்டாங் துறைமுகத்துக்கு கடல் வழியாக மட்டுமே வரமுடியும். ஆனால் பனிமூட்டம் காரணமாக ஹைனானில் படகு சவாரி தடைபட்டது.

50 ஆயிரம் கார்கள்...

இதனால் துறைமுகத்தை நோக்கி 50 ஆயிரம் கார்களில் சுற்றுலா வந்தவர்கள் படையெடுத்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் கார்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீட்டர் தூரத்துக்கு கார்கள் வரிசையாக நின்றன. இந்த நிலை 5 நாட்கள் நீடித்தது. இதற்கிடையே வானிலை சீரானதும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் படகில் அனுப்பி வைக்கப்பட்டனர். போக்குவரத்து சீராகாத 5 நாட்களும் சிலர் பகல் மற்றும் இரவு பொழுதை காரிலேயே கழித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து