முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பரிசு வழங்கினார் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடை பந்து போட்டிகள் 3 நாட்கள் நடந்தது.

கூடைப் பந்து போட்டி

இதில் கூடைப் பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று தேர்வு பெற்ற 21 வயதுக்குட்பட்ட 732 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் மொத்தம் 32 அணிகளாக அணிக்கு 12 பேர் வீதம் 384 பேரும் பெண்கள் பிரிவில் 29 அணிகளாக அணிக்கு 12 பேர் வீதம் 348 பேரும் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. பேபட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. விழாவிக்கு வந்த அனைவரையும் மண்டல முதுநிலை மேலாளர் க.புகழேந்தி வரவேற்று பேசினார். இதில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடமும் காஞ்சிபுரம் அணி 2ம் இடமும் தூத்துக்குடி அணி 3ம் இடமும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் நாகப்பட்டிணம் அணி முதலிடமும் தஞ்சாவூர் அணி 2ம் இடமும் திருவண்ணாமலை அணி 3ம் இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். விழாவில் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஏ.முனியன், மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளர் ஆ.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரா.ஜெயக்குமாரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து