முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாட்டின் பிரதமர் ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்டனம்

எந்த கட்சிக்கும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். பாராளுமன்றத்தில் 2 இடங்களை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. மக்கள் தான் வெற்றி தோல்வி குறித்து தீர்ப்பு அளிப்பார்கள். பிரதமர் முடிவு செய்திட முடியாது. திரிபுரா, மிசோரம், நாகலாந்து, மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கண்டிப்பாக காங்கிரஸ் அமோக வெற்p பெறும். வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. அதை தொடர்ந்து அரியானாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது. மராட்டியத்திலும் இனி காங்கிரஸ் ஆட்சி தான். பாரதிய ஜனதா அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக மக்கள் காங்கிரஸ் பக்கமும், மதசார்பற்ற அணியின் பக்கமும் திரும்பி உள்ளனர். சரித்திரம் மாறி வருகிறது. இதனை தெரிந்து கொள்ளாமல் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று பிரதமர் விமர்சித்து இருப்பது கண்டிக்கத் தக்கது. ஒரு நாட்டின் பிரதமர் இப்படி ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சித்து இருப்பது ஏற்றுக் கொள்ள இயலாதது. நியமன எம்எல்ஏக்கள் செயல்படுவதை நான் தடுக்க வில்லை. எனக்கு எந்த வேலையும் இல்லை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும். எங்களை பொறத்தவரை சட்டப்படியும், விதிமுறைகள் படியும் 3 நியமன எம்எல்ஏக்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ அதிகாரம் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை பிரதமருக்கு தவறான தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரங்கசாமி முதல்வராக இருந்த போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிற்படுத்த பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து