முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.40.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் கணேஷ் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் நேற்று(27.02.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சிப்பணிகள்

இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, நல்லூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேமனாப்பட்டி முதல் கொல்லம்புஞ்சை வரை அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலைப் பணியையும், அரசமலை ஊராட்சி, அரசமலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் கொட்டகைப் பணியையும், சாத்தனூரில் ரூ.1.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை கொட்டகை அமைத்தல் பணியையும், தாய்-2 திட்டத்தின் கீழ் ரூ.17.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் செட்டிக்குளம் மேம்படுத்துதல் பணியையும் என மொத்தம் ரூ.40.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மண்புழு இயற்கை உரங்களை அதிக அளவு தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கவும், சாலைப் பணிகளில் தரமான பொருட்களை உபயோகிக்கவும், குளங்களை முறையாக சீரமைக்கவும், முடிவுற்றப் பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதியழகன், ஜெயந்திதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து