முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் வே.ப.தண்டபாணி, துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      கடலூர்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஜவான் பவன் அருகில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வே.ப.தண்டபாணி,    கொடியசைத்து துவக்கி வைத்தார்.இது குறித்து கலெக்டர் வே.ப.தண்டபாணி,   தெரிவித்ததாவது.

விழிப்புணர்வு பேரணி

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மூலம் மது அருந்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மது பழக்கத்துக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் மது அருந்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. ‘காப்போம் காப்போம் வீட்டையும் நாட்டையும் காப்போம், போதையில் ஆடாதே பாதியில் போகாதே, குடி போதையை கொடுக்கும் குடும்பம் வீதியில் கிடக்கும், கள்ளச்சாராய போதை பழக்கம் நல்ல குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் மாணவர்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரணி திருப்பாதிரிபுலியூர் ஜவான் பவன் அருகிலிருந்து தொடங்கி டவுன்ஹால் வரை சென்றடைந்தது. இப்பேரணி நடைபெறுவதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) எஸ்.நடராஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) டி.குமார், கோட்ட கலால் அலுவலர் (கடலூர்) கே.ரம்யா, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து