முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு: தலைமைச் செயல் அதிகாரி தகவல்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ஏர்செல் சேவையில் இன்று(நேற்று) மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் இன்று(நேற்று) மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏர்செல் செல்லிடப் பேசி சேவையின் சிக்னல் கிடைப்பதில் இன்று(நேற்று) மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகள் வாடகைப் பணம் நிலுவை தொடர்பான பிரச்னையில், தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த டவர்களில் சிக்னல் விநியோகத்தினை நிறுத்தியதால் சேவை தடைபட்டது. தற்பொழுது மீண்டும் அதே மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளிலும் ஏர்செல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் ஏர்செல் எண்னை வங்கிப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் இன்று(நேற்று) மாலை அல்லது மதியத்துக்குள் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து