முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளையங்கோட்டை இக்னேஷியஸ் பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு: கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி 2ம் ஆண்டு பொதுத் தேர்வு  முதல் 06.04.2018 முடிய நடைபெறவுள்ளது.

பிளஸ்-2 தேர்வு

123 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் +2 தேர்வு மையத்தினை கலெக்டர் சந்தீ நந்தூரி,,   நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-திருநெல்வேலி மாவட்டத்தில், மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத் தேர்வு சேரன்மகாதேவி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் 123 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. 16,366 மாணவர்களும், 21,597 மாணவிகளும் என மொத்தம் 37,963 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில், 124 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 20 கண் பார்வையற்ற மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். 36 மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்வதை எழுத ஆசிரியர்கள் (ளுஊசுஐக்ஷநு) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் 123 முதன்மை கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 123 துறை அலுவலர்கள், 2,148 அறை கண்காணிப்பாளர்கள், 232 நிலையான பறக்கும்படை உறுப்பினர்கள், கல்வித் துறை ஆய்வு அலுவலர்கள் தலைமையில் எட்டு பறக்கும் படை குழுக்கள், 25 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்வு மையங்களில் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத் தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் தேவபிச்சை மற்றும் அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து