முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 40,645 மாணவ,மாணவிகள் எழுதினர் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்றைய தினம் தொடங்கியுள்ளதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.03.2018) கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்விற்குப் பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது.

கலெக்டர் தகவல்

மேல்நிலைப் பொது தேர்வுகளுக்காக சேலம் மாவட்டத்தில் 16 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களும், இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வினாத்தாள் அடங்கிய மந்தண கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேல்நிலைத் தேர்வு மையங்களுக்கு 19 வழித்தடங்களில் மந்தண வினாத்தாள் கட்டுகள் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று வழங்க சேலம் மாவட்ட காவல் துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

மேல்நிலைத் தேர்வுகளைப் பொருத்த வரை சேலம் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அத்தேர்வு மையங்களில் 121 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 121 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் தேர்வறைகள் கண்காணிப்பு பணிக்காக 2950 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டும் சேலம் கலெக்டர் தலைமையில் கோட்டாட்சியர் நிலையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பறக்கும் படை குழுக்கள் அனைத்து தேர்வு மையங்களையும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் விதிகளை மீறுபவர்களின்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்து வசதி

12,11 மற்றும் 10 ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகள் நடைபெறும் காலகட்டங்களில் மாணவ, மாணவியர்களை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் ஏற்றிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் தேர்வு மையங்களிலும் மின்சாரம், குடிநீர் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவ,மாணவியர்கள் நீட் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள 20 வட்டங்களிலும் பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து