முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் நடந்த போரின்போது காணாமல் போனவர்களின் நிலையை அறிய 7 பேர் குழு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிய 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை அமைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் போரில் காணாமல் போனவர்களின் நிலை பற்றி கண்டறிய சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கொண்ட அதிகாரிகளை நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பதவிக்காலம் 3 வருடம். இவர்கள் அனைவரும் சட்ட நிபுணர் சாலியா பெய்ரிஸின் கீழ் பணியாற்றுவர். இதில் 2 பேர் தமிழர்கள்.

சுதந்திரமான அமைப்பாக இது செயல்படும். அவ்வப்போது இலங்கை நாடாளுமன்றத்துக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.
2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போரில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை இந்த அமைப்பு மூலம் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டு சட்ட விவகாரங்களை எதிர்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து