முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் புதூரில் புதிய கால்நடை கிளை : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் புதூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய கால்நடை கிளையத்தை திறந்து வைத்து கோமாரி தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.

 திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

கரூர் மாவட்டத்தில் 14-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கடந்த 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கரூர் மாவட்டத்தில் 1,90,150 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடப்படவுள்ளது. கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கோழிகள் அபிவிருத்தித்திட்டம், தீவன அபிவிருத்தித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளின் நலம் பேணுவதற்காக இவ்வாண்டு 25 புதிய கால்நடை மருந்தகங்களும், 5 கால்நடை மருத்துவமனைகளும், 125 கால்நடை கிளைநிலையங்களும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் சிந்தாயூர் கிராமத்தில் 11.11.2017 அன்று புதிய கால்நடை மருந்தகம் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 7 புதிய கால்நடை கிளைநிலையங்கள் தோற்றுவிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்று ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் புதிய கால்நடை கிளைநிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரைப்பாளையம், எஸ்.வெள்ளாளபட்டி, மேட்டு திருக்காம்புலியூர், மஞ்சபுளிப்பட்டி, பொசியம்பட்டி, கல்லடை ஆகிய கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. இவ்வாண்டு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 33 ஊராட்சிகளில் 2929 பயனாளிகளுக்கு 11,176 ஆடுகள் (தலா 4 ஆடுகள் வீதம்) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காக தற்சமயம் 14வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தமிழகம் முழுவதும், கடந்த 1ம் தேதி முதல் 21.03.2018 வரை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் தற்சமயம் இயங்கி வரும் கீழ்க்கண்ட கால்நடை நிலையங்கள் மூலமாக விவசாய பெருமக்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் மற்றும் இதரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை மருந்தகம்

கரூர் மாவட்டத்தில், 1 கால்நடை பெரு மருத்துவமனையும், 2 கால்நடை மருத்துவமனைகளும், 66 கால்நடை மருந்தகங்களும், 1 நடமாடும் கால்நடை மருந்தகமும், 18 கால்நடை கிளை நிலையங்களும், 1 கால்நடை நோய்ப்புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு 14-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசித்திட்டத்திற்கென 1,92,000 டோஸ் ஊநீர் பெறப்பட்டு, குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்துகள், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அன்றாடம் கொண்டு செல்லப்பட்டு, பசு மற்றும் எருமை மாடுகளுக்கு (3 மாத வயதிற்கு கீழ் உள்ள கன்றுகள் தவிர) 100 சதவீதம் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென மாவட்டம் முழுவதும் 56 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் எஸ்.கதிர்வேல், துணை இயக்குநர்கள் ந.குழந்தைசாமி, துரைசாமி, கால்நடை மருத்துவர்கள் குல்சார்பர்வீன், கண்ணியப்பன், சிவானந்தம், கால்நடை ஆய்வாளர்கள் சக்திவேல், பாபு, பெரியசாமி, முத்துக்குமார், செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து