முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக்கூடிய நல்ல பொறியாளராக மாற வேண்டும் - டாக்டர் ஜி. விசுவநாதன்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக்கூடிய நல்ல பொறியாளராக மாற வேண்டும் - டாக்டர் ஜி. விசுவநாதன் நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரியின் 10 ஆவது ஆண்டு விழாவில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து மாணவர்களை ஊக்குவித்தார். கல்லூரியின் நிறுவனர் ஆர். பி. சாரதி தலைமையில் தலைவர் நிதிஷ் ஹரிஹர், சார்பு தலைவி ஐஸ்வர்யா நிதிஷ் துணை தலைவர் & செயலாளர் ஜி. பிரபாகரன் ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் ஜி. விசுவநாதன் அவர்கள் கல்லூரியில் உள்ள அணைத்து துறைகளின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவ மாணவிகளுக்கும் 100 % தேர்ச்சி விகிதம் பெற்ற பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில் இந்தியா நாடு அதிவேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அனால் நம் மக்கள் தொகையில் அனைவர்க்கும் நாம் உயர் கல்வி கொடுக்க முடியாமல் இருக்கிறோம். அதை மாற்றுவதற்காக நன் என் பல்கலைக்கழகத்தில் என் ஊர் மக்களுக்கு இலவச கல்வி வழங்கிக்கொண்டிருக்கிறேன் என்றார். பிறகு நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் ஆர். பி. சாரதி அய்யா கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறினார் அவருடைய பேரன் கல்லூரியின் தலைவர் பி நிதிஷ் ஹரிஹர் என் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றார். கல்லூரி மாணவர்கள் படித்து பட்டம் வாங்குவதை மட்டும் இலக்காக கொள்ளாமல் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக்கூடிய நல்ல பொறியாளராக மாற வேண்டும் என்றார். கல்லூரியின் தலைவர் பி நிதிஷ் ஹரிஹர் மாணவ மாணவிகளின் கல்வி சார்ந்த மற்றும் கல்விசாரா சாதனைகளை பாராட்டினார். வாழ்கை நமக்கு அளிக்கும் பிரச்சனைகளை படிக்கற்களாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று அறிவுறித்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் முனுசாமி விஸ்வநாதன் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து