அடுத்த படத்திற்காக விஞ்ஞானி கெட்-அப்புக்கு மாறும் சிவகார்த்திகேயன்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      சினிமா
Sivakarthikeyan

Source: provided

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறவிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்தார். அது போன்ற வேடம்தான் தனக்கு கை கொடுக்கும் என்று நம்பினார்.

‘வேலைக்காரன்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். மோகன்ராஜா இந்த படத்தை இயக்கினார். இது சிவகார்த்திகேயனுக்கு புதுவிதமான படமாக அமைந்தது.இப்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை.

எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ‘கெட்-அப்’-க்கு மாறுகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக கூறப்படுகிறது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து