முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வயதாக இருந்த போது வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன்: தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது.

அந்த "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

"ஆயிரத்தில் ஒருவன்" தொடங்கி "பட்டிகாட்டு பொன்னையா" வரை 28 படங்களில் புரட்சி தலைவருடன் ஜோடியாக நடித்த புரட்சி தலைவி ஜெயலலிதா தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவரது பிறந்த நாளான்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர். தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கூறி இருப்பதாவது:-

எனக்கு 7 வயதாக இருந்த போது வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். அதன் இரண்டாம் பாகத்தின் கதையும் எனக்கு தெரியும். குழந்தைகள், இளைஞர்கள் உட்பட எல்லோராலும் இன்றும் ரசிக்க கூடிய வகையில் படம் இருக்கும். எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரரிடமும் இந்த கதையை பற்றி விவாதித்திருக்கிறோம். முன் தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டது. லாஸ் ஏஞ்சலஸ், பெங்களூரு ஆகிய இடங்களில் படத்திற்கான வேலைகளை துவக்க இருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். கத்தி சண்டை போட்டதை நிறைய படங்களில் பார்த்து விட்டோம். அதனால் இந்த படத்தில் நவீன எந்திரங்களை கையாள்வதையும் வைத்திருக்கிறோம். கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, சூடான் ஆகிய இடங்களை சுற்றி கதை நடக்கும். லாப நோக்கத்துக்காக இந்த படத்தை எடுக்கவில்லை.  லாபம் வந்தால் அதை நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்கு நன்கொடையாக அளிப்போம். படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இருக்கிறோம் என்றார்.

இந்த சந்திப்பில் படத்தின் இணை தயாரிப்பாளர் அஸ்வின், நடிகர் வருண் , நடிகை குட்டி பத்மினி, இயக்குனர் அருள்மூர்த்திஆகியோரும் கலந்து கொண்டனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து