முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா திரளான பக்தர்கள் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 186வது அவதார தினவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

அவதார தின விழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதையட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடந்தது. பின்னர் காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதாரவிழா பணிவிடையும் நடந்தது. அப்போது திரளான மக்கள் “அய்யா சிவ சிவ அரகரா அரகரா” என்று கூறி வழிபட்டனர். தொடாந்து அன்னதர்மம் நடந்தது.  முன்னதாக நேற்று முன்தினம்(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மமும் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மமும், மாலை 5 மணிக்கு பணிவிடை, தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்ரீ குரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடைபெற்றது. அதேபோல் பேராசிரியர் ஸ்ரீமதி தியாகராஜனின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இரவு அன்னதர்மம் நடந்தது. விழாவில், வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கில் சந்திரசேகரன், செயலாளர் வள்ளியூர் தர்மர், கௌரவ தலைவர் நடேச நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் சிங்கபாண்டி, தோப்புமணி, விஜயகுமார், அய்யாபழம், இணை செயலாளர்கள் வரதராஜபெருமாள், பொன்னுதுரை, செல்வின், கனகவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்ககிருஷ்ணன், ராதாகிருஷணன், உறுப்பினர் களக்காடு பால்சாமி, பணிவிடையாளர் பச்சைமால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து