முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

நாட்டில் செயல்படும் மத்திய அரசு வங்கி மற்றும் தனியார் வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வகுத்து கொடுக்கும் விதிமுறைகள்படியே இந்த வங்கிகள் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

5 வங்கிகளின் செயல்பாடு இதேபோல மோசமாக உள்ளது. வைர வியாபாரி நிரவ்மோடி மோசடி செய்த பஞ்சாப் நே‌ஷனல் வங்கியும் இதில் அடங்கும். இந்த வங்கியுடன் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி ஆகியவற்றின் செயல்பாடும் மோசமாக உள்ளது. இந்த வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் விகிதாச்சாரம் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே அவை சரியாக செயல்படாத வங்கிகளின் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் இந்த வங்கிகளில் கடன் வழங்குவதிலும், வைப்பு தொகை, பங்கு தொகை, கிளை விரிவாக்கம், இழப்பீடு விவகாரங்கள் போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்கும். எனவே இந்த வங்கிகள் முன்புபோல தன்னிச்சையாக செயல்பட முடியாது. இதற்கு மேலும் நஷ்டமோ, இழப்போ ஏற்படாத வகையில் குறுகிய வட்டத்துக்குள் அந்த வங்கிகள் செயல்பட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து