முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி மோசடி

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. 447 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தி உள்ளன என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரித்துறையின் டிடிஎஸ் வரிப் பிரிவு இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதுடன், சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர். வருமான வரிச் சட்டத்தின் படி இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும், குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து